இந்தப் (2013) புத்தாண்டை முன்னிட்டு,
தேனியில் நடைபெற்ற ஒரு பயிற்சி நிகழ்வில், நான் கேட்டேன்... எதற்காக புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று..?
பலரின் கருத்துகளைக் கேட்ட பின், நான் சொன்னேன்...
வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான்... ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டியதுதான்... அவ்வாறு கொண்டாட முடியாதவர்கள், கொண்டாட மறந்தவர்கள் மற்றும் கொண்டாட்டங்களைத் துறந்தவர்கள் ஆகியோருக்கு, நினைவூட்டுவதற்காகவே, சில குறிப்பட்ட நாட்களையாவது கொண்டாட வைத்துள்ளது நம் சமூகம்.
அப்படி நம் வாழ்வைக் கொண்டாட, அறிவும், பொருளும் பெருக, உயர்வான சாதனைகள் புரிய, மேலும் வளமும், நலமும் பெறத் தேவையான, மனித வள மேம்பாட்டுப் பயிற்சிகளை, சிறந்த முறையில், கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கி வரும் நிறுவனம் தான், எங்களின் "யோசி" - ஆகும்.
தமிழகம் முழுவதும், ஆயிரக் கணக்கான பயிற்சி நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள, எங்கள் "யோசி" நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய, இந்த இணையதளத்தைக் காணுங்கள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக